மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 32 · 35 / 159

பாண்டியநாடு

மீன் போல தூங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்க வைக்கும் அழகன் என்பதால் சிவனுக்கு ‘சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்’ என்றும் சிறப்புப் பெயர் உண்டானது.

மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை தம்பதிக்குக் குழந்தை இல்லை. குறையைப் போக்க புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். அதில் பார்வதியே குழந்தையாக மூன்று தனங்களுடன் அவதரித்தாள். ‘தடாதகை’ என்று பெயரிட்டு வளர்த்தனர். மகளுக்குப் போர்ப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார் மன்னர். பருவ வயதை அடைந்ததும் பாண்டிய நாட்டின் இளவரசியாக அறிவித்து மகளுக்குப் பட்டாபிஷேகம் நடத்தினார். தடாதகை எண்திசைக் காவலர்களிடம் திக்கு விஜயமாகப் போருக்குச் சென்று வெற்றி பெற்றாள். இறுதியில் வடக்குத் திசை நோக்கிச் சென்று கைலாயத்தை அடைந்தாள். நந்திகேஸ்வரரைத் தோற்கடித்து சிவபெருமானுடன் மோத தயாரானாள். ஆனால் அவரைக் கண்டதும் தடாதகை நாணத்தால் முகம் சிவக்க, மூன்றாவது தனம் மறைந்தது. ‘இவரே உன் மணவாளன்’ என அப்போது வானில் அசரீரி ஒலித்தது. அதன்படி பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் சிவபெருமானின் தலைமையில் ஒன்று கூடினர். மதுரையில் சிவபார்வதி திருமணம் கோலாகலமாக நடந்தது. அன்று முதல் தெய்வத் தம்பதியரின் ஆட்சி மதுரையில் தொடங்கியது. மீன் போல தூங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்க வைக்கும் அழகன் என்பதால் சிவனுக்கு ‘சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்’ என்றும் சிறப்புப் பெயர் உண்டானது. விருத்திராசுனைக் கொன்ற பாவம் தீர இந்திரன் சிவத்தலங்களுக்கு யாத்திரை புறப்பட்டார். கடம்ப வனமாக இருந்த மதுரையில் சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தைப் வழிபட பாவம் நீங்கியது. எட்டுத் திக்கும் யானைகள் சுமக்கும் விதத்தில் பெரிய விமானம் அமைத்து கோயில் கட்டி இந்திரன் பூஜித்தார். வியாபாரத்திற்காக கடம்ப வனம் வழியாக வந்த தனஞ்ஜெயன் என்னும் வணிகர் கடம்ப வனத்தில் இருந்த கோயிலைக் கண்டு அதிசயித்தார். விஷயம் அறிந்த குலசேகரப் பாண்டியன் கோயிலைச் சுற்றி மதுரை நகரை உருவாக்கி கோயிலுக்குத் திருப்பணி செய்தார்.

விளம்பரம்
மேலே
விளம்பரம்