மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 32 · 36 / 159

எப்போதும் திருவிழா

கோயில்களில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பிரம்மோற்ஸவம் என்னும் பெரிய திருவிழா நடக்கும். ஆனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 12 மாதமும் பெரிய திருவிழா நடக்கிறது. சித்திரை பிரம்மோற்ஸவம், ஆடி முளைக்கொட்டு உற்ஸவம், ஆவணி பிட்டுத்திருவிழா, கார்த்திகை தீபத்திருவிழா, தை தெப்பம், மாசி மண்டல உற்ஸவம் என ஆறு விழாக்களுக்கு கொடியேற்றப்படுகிறது. இதில் முளைக்கொட்டு விழா அம்பாளுக்கு நடப்பதால் இவ்விழாவிற்கு மட்டும் அம்பாள் சன்னதி முன்பு கொடியேற்றம் நடக்கிறது. வைகாசி வசந்த உற்ஸவம், ஆனி ஊஞ்சல் உற்ஸவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கோலாட்டம், மார்கழியில் மாணிக்கவாசகர் உற்ஸவம், அம்பாளுக்கு எண்ணெய் காப்பு விழா மற்றும் பங்குனி பவித்ரோத்ஸவம் ஆகிய 6 விழாக்களுக்கு காப்பு கட்டி விழா துவங்குகிறது.

விளம்பரம்
விளம்பரம்
மேலே
விளம்பரம்