சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 34 · 50 / 159
நால்வகை கும்பாபிஷேகம்
நான்கு காரணங்களின் அடிப்படையில் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அநாவர்த்தனம்: கோயில் இல்லாத ஊரில் புதிதாக கோயில் கட்டி, புதிய விக்ரஹங்களை (இறை திருவுருவம்) பிரதிஷ்டை செய்து நடத்தும் கும்பாபிஷேகம். ஆவர்த்தனம்: பழுதுபட்டு வழிபாடு இல்லாமல் போன கோயிலை சீர்படுத்தி, கும்பாபிஷேகம் நடத்துதல். புனராவர்த்தனம்: வழிபாடு முறையாக நடந்தாலும், கோயில் விமானம், கொடிமரம், கோபுரம் போன்றவை பழுதுபட்டிருந்தால் அதனை புதுப்பித்து நடத்தப்படும் கும்பாபிஷேகம் புனராவர்த்தனம். அந்தரிதம்: கோயிலுக்குள் திருட்டு, தீவிபத்து, மரணம், ஒதுக்கப்பட்ட விலங்குகள் புகுதல் போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடி பிராயச்சித்தமாக நடக்கும் கும்பாபிஷேகம்.