மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 34 · 49 / 159

மூவகை பூஜை

கோயில் பூஜைகள் நித்தியம், நைமித்திகம், காமியம் என மூவகைப்படும். அன்றாடம் நடத்தப்படும் வழிபாடு நித்ய பூஜை எனப்படும். விசேஷ நாட்களில் நடக்கும் வழிபாடு நைமித்திகம் ஆகும். கும்பாபிஷேகம் தொடர்பான அனைத்தும் நைமித்திக பூஜையில் அடங்கும். தனிநபர் சார்பாகவோ அல்லது பஞ்சம், யுத்த பயம், நாட்டு நலன் குறித்த பொதுவிஷயம் குறித்தோ நடக்கும் வழிபாடு காமிய பூஜையாகும்.

விளம்பரம்
மேலே
விளம்பரம்