மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 34 · 54 / 159

மதுரைக்கு நமஸ்காரம்

‘வடமொழியும் தென்மொழியும் ஆனவன் காண்’ என சிவபெருமானை திருநாவுக்கரசர் போற்றியுள்ளார். புகழ் பெற்ற தலங்களின் புராண வரலாறுகள் சமஸ்கிருதத்தில் இருந்தன. தலபுராணம் இல்லாத கோயில்களுக்கு மொழிப்புலமை கொண்ட புலவர்களை கொண்டு அந்தந்த தலபுராணங்களை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் பாடி வைத்தனர். அதன்படியே ஐந்தாம் வேதம் என்று அழைக்கப்படும் மகாபாரதத்தை விநாயகப்பெருமான் அருளுடன் இயற்றியவர் வியாசர். நான்கு வேதங்களையும், பதினென் புராணங்களையும் முறைப்படுத்தி ஹிந்து தர்மத்தை போற்றிய முதல்பெருமை வியாசரையே சாரும். அப்படிப்பட்ட வியாசர், ‘வந்தே ஹாலாஸ்ய நகரீம் வந்தே ஹேமாப்ஜினீ மபி வந்தே ஸூமீன நயனாம் வந்தே ஸூந்தர நாயகம்’ என்று ஸ்ரீ ஸ்கந்த மகாபுராணத்தில் உள்ள ஹாலாசிய மஹாத்மியத்தில் மதுரை நகருக்கு நமஸ்காரம் என்று ஸ்துதி செய்கிறார்.

விளம்பரம்
விளம்பரம்
மேலே
விளம்பரம்