இத்திருக்கோவிலில் அமாவாசை, பெளவுர்னமி, புரட்டாசி நவராத்திரி அமாவாசைபூஜையும், சித்திரை முதல் நாள் ஆடி 18 ஊஞ்சல் பூஜையும், தைமுதல் நாள் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
இத்திருக்கோவிலில் அம்மன் நின்ற திருக்கோலத்தில் அழகுடன் காட்சி அளிக்கின்றாள்.
பிரார்த்தனை
படி பூஜை செய்து விழிபட்டால் நினைத்த சகல காரியங்களும் நினைத்தபடி நிறைவேறும் என்பது நம்பிக்கையாக நிலவுகிறது.
நேர்த்திக்கடன்:
படி பூஜை செய்து விழிபட்டால் நினைத்த சகல காரியங்களும் நினைத்தபடி நிறைவேறும்
தல வரலாறு:
இக்கோவில் கோவை மாவட்டம் பாலவேளாளர் கவுண்டர் சமூகத்தில் வேம்ப குல மக்களுக்கு குல தெய்வமாகவும் இப்பகுதி மக்களால் போற்றி வழிபட்டுவருகின்றனர், இத்திருக்கோவில் இக்குல மக்களால் 2010ஆம் ஆண்டு புதிதாக கோவில் அழகுற செய்து கும்பாபிஷகம் நடைபெற்றது.
இருப்பிடம் : கோவை காந்திபுரத்தில் இருந்து துடியலூர் விழியாக ஜி.என். மில்ஸ் பிரிவு இறங்கி காசி நஞ்சே கவுண்டர் புதூர் சுமார் 2 கி. மீட்டர் மேற்கு பகுதியில் உள்ளது.