கோயில் கிழக்கு திசை பார்த்துள்ளது. சுவாமியும் கிழக்கு நோக்கி பார்த்துள்ளார். கோயிலில் மூலவர் ஜலகண்டேஸ்வரர், சங்கர நாயகி, அகிலாண்டேஸ்வரி, சர்ப்பகணபதி, சந்தான கோபால கிருஷ்ணன், முருகன், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், அனுமன், துர்க்கையம்மன், முப்பெரும் தேவியர், நடராஜர், சிவகாமி, சமயக்குரவர்கள், பஞ்ச சித்த லிங்கேஸ்வரர், பிரத்யங்கிரா, ராகு, கேது, சண்டிகேஸ்வரர், நந்தி, சப்தமாதாக்கள் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
குழந்தைவரம், கல்யாணதடை, தொழில், விவசாயம் கோரி பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பில்லி சூன்யத்தால் பாதிக்கப்பட்டோர், வியாபார, தொழில் பாதிப்பு அடைந்தோர், இங்கு உள்ள அக்னி ஹோமத்தில் 9 முறை வலம் வந்து விறகுகளை போட்டால் நிவர்த்தி அடைகின்றனர். இந்த அக்னி ஹோமம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
தலபெருமை:
பிரதோஷ வழிபாடு, பவுர்ணமி அன்று காப்பு திருநீறு மருத்துவ தன்மை கொண்டது. திருமணத்தடை, புத்திரபாக்கியம், முன்னோர் சாப, பாவ விமோசனம், பிதுர்கர்மம், பிரம்மஹத்திதோஷம், முதலியன அமாவாசை அன்று மோட்ச தீப வழிபாடு சித்தர் அய்யாவின் அருளால் நடைபெறுகிறது. காப்பு திருநீரால், நோய், பிணிகள் நீங்குகிறது. 27 நட்சத்திர மரங்கள் உண்டு. குருபகவானின் தலவிருட்சமான கல்லாலமரம் இங்கு உண்டு. அகத்தியர் வழிபாடு, வைகாசி மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று குருபூஜை நடைபெறுகிறது.
தல வரலாறு:
வெள்ளியங்கிரி மலையில் இருந்து வந்த சித்தரால் அரவம்புற்றில் இருந்து அவரின் அருளால் மழை பெய்து காட்சி தந்தது. சுயம்புவாக அருள்பாலித்து வருகிறார். சித்தர் அய்யாவின் அருளால் எல்லா நன்மைகளும் நடக்கிறது.
இருப்பிடம் : கோவை டவுன் ஹாலில் இருந்து பேரூர் செல்லும் வழியில் மூன்றரை கி.மீ. துõர்த்தில் செல்வபுரம் உள்ளது. அங்கிருந்து இடது புறம் 1 கி.மீ. துõரத்தில் கோயில் அமைந்துள்ளது. பஸ்வசதிகள் இல்லை.