பதிவு செய்த நாள்
17
ஏப்
2012
10:04
பவானி: பவானி, கேசரிமங்கலம், சித்தார் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 19ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.
மே, 1ம் தேதி இரவு, 9 மணிக்கு காவிரியிலிருந்து வாண வேடிக்கையுடன் ஸ்வாமி ஊர்வலம் நடக்கிறது. மே, 2ம் தேதி காலை 8 மணிக்கு பூவோடு எடுத்தல், குண்டம் இறங்குதல் மற்றும் இரவு 9 மணிக்கு பாரா நடக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 3ம் தேதி காலை, 8 மணிக்கு காவிரியில் இருந்து பெண்கள் தீர்த்தம் எடுத்து வரவுள்ளனர். காலை 11 மணிக்கு பொங்கல் அழைப்பு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. மதியம், 2 மணிக்கு முப்பேடு, மாவிளக்கு ஊர்வலம், மாலை, 4 மணிக்கு அலகு குத்தி அக்னி சட்டி எடுத்து வருதல் நடக்கிறது. மே, 4ம் தேதி கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாள்தோறும் இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது.