பதிவு செய்த நாள்
18
நவ
2019
03:11
ஈரோடு: ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், கோவில்களில் மாலை அணிந்து, சரண கோஷம் முழங்க, மண்டல விரதத்தை தொடங்கினர்.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கார்த்திகை மாத பிறப்பான நேற்று 17ல், துளசி மாலை அணிந்து, 48 நாள் விரதத்தை தொடங்கினர். ஈரோடு, கருங்கல் பாளையம், காவிரி ரோட்டில் உள்ள ஐயப்பா சேவா நிறுவன ஐயப்பன் கோவிலில், பெண்கள், குழந்தைகள் என, ஆயிரக்கணக்கானோர், ’சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம் முழங்கக மாலையணிந்தனர். கோவில் தலைவர் கேசவன், குருசாமி அருணாசலம் மாலை அணிவித் தனர். இதேபோல், ஈரோடு ரயில்வே காலனி சித்தி விநாயகர் கோவில், சக்தி விநாய கர் கோவில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் மாலையணிந்தனர்.
* கோபி வேலுமணி நகர் ஐயப்பன் கோவிலில், அதிகாலை முதலே மாலை அணிந்து விரதம் தொடங்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷகம், அலங்காரம் நடந்தது. கோபி, குள்ளம்பாளையம், பொலவக்காலிபாளையம், சத்தி, நல்லகவுண்டம் பாளை யம் பகுதிகளை சேர்ந்த, 350க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து கொண்டனர்.
* பவானி, கூடுதுறை விநாயகர் கோவில், அந்தியூர் அருகே, கிருஷ்ணாபுரம் ஐயப்பன் கோவி லில், கறுப்பு, நீல நிறை ஆடை அணிந்து, குருசாமி கைகளால் மாலை அணிந்து, நூற்றுக் கணக்கான பக்தர்கள், விரதத்தை தொடங்கினர்.