திருப்போரூர்: கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, கோவில்களில் அய்யப்ப பக்தர்கள், மாலை அணிந்தனர். கார்த்திகை மாத முதல் நாளான நேற்று, திருப்போரூர் கந்தசுவாமி கோவில், அய்யப்பன் கோவில், புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்டவற்றில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தனர். கடைகளில், துளசி மாலை, ஸ்படிகமாலை மற்றும் கறுப்பு, காவி நிற வஸ்திரங்கள் வாங்க, அதிக பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி, திருப்போரூர் பக்தர்கள் பிரணவமலை கிரிவலம் வந்தனர்.