பதிவு செய்த நாள்
18
நவ
2019
03:11
நாமக்கல்: நாமக்கல், போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு விழா வரும், 24ல், நடக்கிறது. நேற்று (நவம்., 17ல்) காலை, 8:30 மணிக்கு திருப்பலி யும், 10:30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமை வகித்து, திருவிழா திருக்கொடியை ஏற்றி வைத்தார்.
அதை தொடர்ந்து இன்று 18ல் துவங்கி, வரும், 23 வரை தினமும் மாலை, 6:30 மணிக்கு நவநாள் திருப்பலி நடக்கிறது. அதில், சிலுவைகிரி பங்கு தந்தை ஜெய் பெர்னார்டு ஜோசப், ஏற்காடு மஞ்சக்குட்டை பங்கு தந்தை ஹென்றி கிஷோர், கருமந்துறை பங்கு தந்தை அமல் மகிமை தாஸ், வெள்ளாளப்பாளையம் பங்கு தந்தை ஞானராஜ், தலைவாசல் பங்குதந்தை எட்வர்டு ததேயுஸ், சேலம் இளங்குருமடம் உதவி அதிபர் ஸ்டேன்லி சேவியர் ஆகியோர் தலைமை யில், திருப்பலி நடக்கிறது.
வரும், 24ல் காலை, 8:45 மணிக்கு அருட்பணியாளர்களுக்கு வரவேற்பு, 9:00 மணிக்கு சேலம் மூவேந்தர் அரங்க இயக்குனர் ஸ்டீபன் சொரூபன் தலைமையில், திருவிழா திருப்பலி நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு சேலம் மறைமாவட்ட பொருளாளர் ஜேக்கப் தலைமையில், திருவிழா திருப்பலி, மாலை, 6:00 மணிக்கு தேர் மந்திரிப்பு மற்றும் கிறிஸ்து அரசர் தேர்பவனி நடக்கிறது.
அலங்கரிக்கப்பட்டி மின் தேரில், நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் கிறிஸ்து அரசர், பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார். வழிநெடுகிலும், பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், புனிதரை வணங்குவர். இரவு, 9:30 மணிக்கு பேட்டப் பாளையம் பங்கு தந்தை பிரகாஷ் தலைமையில், திவ்விய நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம் செய்யப்படுகிறது.