பாலசுப்பிரமணியர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2026 01:01
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலுார் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் தை கிருத்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்து, சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.