கள்ளக்குறிச்சி: ஊராங்கனி கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சங்கராபுரம் அடுத்த ஊராங்கனி கிராமத்தில் வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர், செல்வகணபதி, பாலதண்டாயுதபாணி, மகா மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் விழாவையொட்டி, நேற்று காலை விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், லஷ்மி குபேர ஹோமம், தன்வந்திரி ஹோமம், கடம் புறப்பாடு நடந்தது.
அதைத் தொடர்ந்து, வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் மற்றும் பரிவார மூர்த்தி கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.