மாசிமக பிரம்மோற்சவம் அம்மன் குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2026 01:01
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை முன்னிட்டு, அம்மன் குளத்தில் நீர் நிரம்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மாசிமக பிரம்மோற்சவம், ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும்.
மாசி மக பிரம்மோற்சவத்தின் போது, லட்சக்கணக்கானோர் மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சுவாமியை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டு மாசிமக பிரம்மோற்சவம் வரும் பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
முக்கிய நிகழ்வாக, வரும் பிப்., 26ம் தேதி விபச்சித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.
மார்ச், 1ம் தேதி பஞ்ச மூர்த்திகள் வீதியுலா; மார்ச், 2ம் தேதி மாசிமகம், மாலை தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
தொடர்ந்து, 3ம் தேதி, நகராட்சி நிர்வாகம் சார்பில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இதற்காக, ஆழ்துளை கிணறு மூலம், பாலக்கரையில் உள்ள அம்மன் குளத்தில் நீர்நிரப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.