பதிவு செய்த நாள்
20
நவ
2019
01:11
வீரபாண்டி: காலபைரவர் ஜென்மாஷ்டமியையொட்டி, கரபுரநாதர் கோவிலில், 108 சங்காபிஷே கம், 1,008 வடைமாலையுடன் சிறப்பு பூஜை நடந்தது.
கார்த்திகையில் வரும் தேய்பிறை அஷ்டமி, காலபைரவரின் ஜென்மாஷ்டமியாக கொண்டாட ப்படுகிறது. அதன்படி, சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், நேற்று (நவம்., 19ல்) மாலை, 6:00 மணிக்கு, 108 சங்குகளில் புனிதநீரை நிரப்பி, மலர்களால் அலங்கரித்து, சிறப்பு யாக பூஜை நடந்தது.
பூர்ணாஹூதி முடிந்து, சங்கு, கலசத்தில் வைத்த புனிதநீரால், காலபைரவருக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. மூலவர் காலபைரவர், சன்னதி கோபுரத்திலுள்ள அஷ்ட பைரவர் சிலை களுக்கு, 1,008 வடைமாலை சாற்றி, சந்தன காப்பு அலங்காரத்துடன், தீபாராதனை காட்டப் பட்டது. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
உலக நன்மை வேண்டி...: உலக நன்மை வேண்டி, ஆத்தூர், கைலாசநாதர் கோவில் வளாகத் திலுள்ள, பிரத்தியங்கிரா தேவிக்கு, யாக வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, பால், பழம், பன்னீர் உள்பட, பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் தேவி, சொர்ண பைரவர் அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ் வரர் கோவிலில், சிறப்பு யாகம் நடத்தி, கால பைரவருக்கு, பால், மஞ்சள், தயிர், வெண்ணெய், நெய், தேன் உள்ளிட்ட அபிஷேக பூஜை நடந்தது. பின், சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் பைரவர் காட்சியளித்தார்.