பதிவு செய்த நாள்
25
நவ
2019
10:11
புதுச்சேரி: தருமாபுரி ஆபத்சஹாய ஆஞ்சநேய சுவாமி கோவிலில், வருடாபி ஷேக விழா நடந்தது.
புதுச்சேரி தருமாபுரி, ஆபத்சஹாய ஆஞ்சநேய சுவாமி கோவிலில், வருடாபிஷேகம் விழா, நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, பகவத் பிரார்த்தனை, விநாயகர் வழிபாடு, யஜமான சங்கல்பம், கும்பஸ்தாபனம், அக்னிப்பிரதிஷ்டை, அனுமன் மூலமந்திரஹோமத்துடன் துவங்கியது.நேற்று காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், ராம மந்திர ஹோமம், அனுமன் மூலமந்திர ஹோமம், காயத்திரி ஹோமம் நடந்தது. காலை 8:00 மணிக்கு, 108 பால்குட ஊர்வலம், ஆபத்ஸஹாய ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சீதாராம கல்யாண உற்வசம் நடந்தது. அதைத் தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு, சுவாமி புறப்பாடு நடந்தது.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.