சபரிமலை: சபரிமலையில் மாஸ்டர் பிளான் திட்டங்களை அமல்படுத்துவது தொடர் பாக டில்லியில் டிச.,4ல் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
சபரிமலை மற்றும் பம்பையில் 100 ஆண்டு கால வளர்ச்சியை முன் னிறுத்தி திட்டங்களை செயல்படுத்தும்வகையில் மாஸ்டர் பிளான் கமிட்டியை கேரள உயர்நீதிமன்றம் நியமித்து உள்ளது. இதன் தலைவராக சிரிஜெகன் உள்ளார். கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த பெருமழையில் பம்பை உருக்குலைந்தது. தற்காலிக பணிகள் மட்டுமே தற்போது செய்யப்பட்டுள்ளன. சேத மடைந்த பம்பை கரையை சரி செய்தல், ஹில்டாப்- பம்பை கணபதி கோயில் உயர்மட்ட பாலம் போன்றவற்றுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் டிச.,4ல் உயர் மட்ட கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் மாஸ்டர்பிளான் கமிட்டி தலைவர், கேரள அரசு தலைமை செயலாளர் மற்றும் தேவசம்போர்டு ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனனர்.