மதீனா பள்ளிவாசலில் ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடுபடுவார். அவரைக் கண்ட நாயகம் அந்த மனிதரைக் காட்டி, ”தோழரே! யார் இவர்?” எனக் கேட்டார்.
”இவர் மிக நல்லவர். இரவு பகல் பாராமல் இறை சிந்தனையில் மூழ்கிக் கிடப்பவர்” என்றார்.
”அப்படியானால் இவரது குடும்பம் எப்படி நடக்கும்?” எனக் கேட்டார்.
”இவருக்கு சகோதரர் ஒருவர் இருக்கிறார். விறகுவெட்டியான அவர் உழைப்பால் கிடைத்த பணத்தை குடும்பத்திற்கு கொடுக்கிறார்” என்றார்.
”அல்லும் பகலும் வழிபாட்டில் ஈடுபடும் இவரை விட விறகுவெட்டிப் பிழைக்கும் சகோதரர் ஆயிரம் மடங்கு மேலானவர். குடும்பத்தின் தேவையை நிறைவேற்ற உழைத்து நியாயமான வழியில் சம்பாதிப்பதும் இறை வணக்கம் தான்” என்றார். இதையறிந்த அந்த மனிதர் சகோதரருக்கு உதவியாகத் தானும் உழைக்க முன்வந்தார்.