”செயல்களின் விளைவு எண்ணங்களைப் பொறுத்ததே. மனிதன் எதை எண்ணுகிறானோ, அதற்குரிய பலன் தான் கிடைக்கும். நல்ல எண்ணத்துடன் செய்யும் செயல்களுக்கு மறுவுலகில் கூலி நிச்சயம் கிடைக்கும். ஆனால் உலகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மட்டுமே சுயநலத்துடன் ஒருவன் செயல்பட்டால் மறுவுலகில் அந்த செயல் விலை போகாது. அதாவது அவனது செயல் அங்கு செல்லாக் காசாக கருதப்படும். ”இறைவன் உருவத்தையோ, செல்வத்தையோ பார்ப்பதில்லை; மாறாக உங்களின் உள்ளம், செயல்களைத் தான் பார்க்கிறான்”