பதிவு செய்த நாள்
06
டிச
2019
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. டிச.,09 முதல் 12 வரை சென்னை, கும்பகோணம், திருச்சி, சேலம், பெங்களூரு, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், தருமபுரி, ஓசூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.