பதிவு செய்த நாள்
07
டிச
2019
12:12
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், கடந்த, ?ல் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து, பொங்கல் வைபவம், கம்பம் எடுத்தல் நிகழ்வு, மஞ்சள் நீராட்டு நடந்தது. அம்மன் திருவீதியுலா நேற்று நடந்தது. கருங்கல் பாளையத்தில் முக்கிய வீதிகளை சுற்றிவந்து நேற்று மாலை, 6:00 மணிக்கு கோவிலுக்கு சிலை வந்தது. இதையடுத்து மறு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. வீதியுலா வந்த அம்மனை, வாசல்களில் கோலமிட்டும், தேங்காய், பழம் படைத்தும், மக்கள் வரவேற்றனர். பக்தர்கள் பலர், பல்வேறு சுவாமிகள் வேடமிட்டு, திருவீதியுலாவில் கலந்து கொண்டனர்.