சத்தியமங்கலம்: சித்திரை மாதம் அமாவாசை நாளான நேற்று, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று கடும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கடந்த, 16ம் தேதி நடந்த மறுபூஜை மூலம் கோவிலின் நடப்பாண்டு குண்டம் விழா நிறைவுபெற்றது. நேற்று சித்திரை அமாவாசை என்பதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை ஆறு மணி பூஜைக்கே பக்தர்கள் தங்கள் குடும்பங்களுடன் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். மதியம் உச்சிகால பூஜை சமயத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து, அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தங்க கவசத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார்.