திருவிதாங்கூர் அரச பரம்பரயினரை திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி ஆலயத்தில், பத்மநாப தாசர்கள் என அழைக்கின்றனர். அவ்வாறு அழைக்க காரணம் 1750-ம் ஆண்டு ராஜாமார்த்தாண்ட வர்மா தன் ஆட்சிக்கு உட்பட்ட ராஜ்யம்... சொத்து.... செல்வம் ஆகிய அனைத்தையும் ஸ்ரீ அனந்தபத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து தன் உடைவாளையும் அவர் காலடியில் வைத்து, எடுத்து முழு சரணாகதி அடைந்தார். அன்று முதல் அவர் பரம்பரையினரை பத்மநாபதாசர் என அழைக்கின்றனர்.