பதிவு செய்த நாள்
23
ஏப்
2012
11:04
சிவகங்கை, : சிவகங்கை, காளையார்கோவிலில் உள்ள கோயில்களில் ஆயுதப்படை போலீசார் உழவாரப்பணிகள் மேற்கொண்டனர். சிவகங்கை ஆயுதப்படை பிரிவு போலீசாருக்கு "நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சிக்காலத்தில், பிரசித்திபெற்ற கோவில்களில் உழவாரப்பணிகளை மேற்கொள்ளுமாறு டி.ஐ.ஜி., ராமசுப்பிரமணியன், பன்னீர்செல்வம் எஸ்.பி., ஆகியோர் உத்தரவிட்டனர். இதையடுத்து, நேற்று காலை சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவில், காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் ஆயுதப்படை போலீசார் உழவாரப்பணிகளில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., வின்சென்ட், இன்ஸ்பெக்டர் தண்டீஸ்வரன் மேற்பார்வையில், 132 போலீசார் உழவாரப்பணிகளில் ஈடுபட்டனர்.