பணம்... பணம்... பணம்... இதை விட்டால் வேறெதுவும் நம் காதில் விழுவதில்லை. கணவர் தன்னிடம் கொடுத்த பணத்தை சேமித்தாள் ஒரு பெண். வங்கியில் வைத்தால் வட்டி கிடைக்கும் என கணவர் அறிவுறுத்தினார். இந்நிலையில் அப்பெண் தன் தோழியைச் சந்தித்தாள். ""வங்கியில் சேமித்தால், இரட்டிப்பாக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? என்னிடம் கொடு. மூன்றே ஆண்டில் இரட்டிப்பாக்கலாம்” எனச் சொல்லி, ஆறுமாதம் வரை வட்டி கொடுத்து வந்தாள். வட்டிப்பணம் வாங்கியதால் ஆசை அதிகமானது. கணவருக்குத் தெரியாமல் நகைகளை விற்று பணத்தை தோழியிடம் கொடுத்தாள். அடுத்த மூன்று மாதம் வட்டி வீடு தேடி வந்தது. பின்னர் வீட்டுப்பக்கம் தோழியைக் காணவில்லை. அவள் வீட்டுக்குப் போன போது கதவு மூடியிருந்தது. விசாரித்ததில், பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியதால் ஊரை விட்டு ஓடியது தெரிய வந்தது. மனம் நொறுங்கிப் போய் இறுதியில் தற்கொலை செய்தாள். "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது அது உயிரை பறித்து விடும்.