வெள்ளகோவில்: வெள்ளகோவில், ஐய்யப்பசுவாமி திருக்கோவிலில் நேற்று பெண்கள் பக்தி பரவசத்துடன் விளக்கு பூஜையில் கலந்துகொண்டு பூஜை செய்தனர்.
வெள்ளகோவில், குமார்வலசு, ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் 4 ம் ஆண்டு கொடியேற்ற நிகழ்ச்சியுடன் சிறப்பு வழிபாடு ஆறு நாட்களாக நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்வில் ஐயப்ப சுவாமிக்கு அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை வழிபாடு தீபாராதனை, உற்சவர் திருவீதி உலா நடந்தது. மாலை 7 மணி அளவில் திருவிளக்கு சகஸ்ரநாம அர்ச்சனை பூஜை, திருவிளக்கு பூஜை, மகா தீபாராதனை நடந்தது, 750 பெண்கள் திருவிளக்கு பூஜையில் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். விளக்கு பூஜையில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கம், சேவா சங்க அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர்.