சபரிமலை, மாளிகைப்புறம் கோயிலில் மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவற்றை துாவி அசுத்தப்படுத்தக்கூடாது என்று மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கூறினார். பக்தர்கள் இருமுடி கட்டில் கொண்டு வரும் மஞ்சள் பொடியை மாளிகைப்புறம் கோயிலிலும், நாகர் சன்னதியிலும் துாவுகின்றனர். திருநீறை மணிமண்டபத்திலும், குங்குமத்தை நவக்கிரக சன்னதியிலும் துாவுகின்றனர். அம்மனுக்கு கொண்டு வரும் ரவிக்கை துணிகளை மாளிகைப்புறம் கோயில் கூரையில் வீசுகின்றனர். புனித பொருட்களை இவ்வாறு வீசக்கூடாது என பரமேஸ்வரன் நம்பூதிரி கூறினார்.
அவர் கூறியதாவது: தேவையில்லாத ஆசாரங்களை உருவாக்கி கோயிலை அசுத்தம் செய்யக்கூடாது. வழிபாட்டு பொருட்களை அதற்கான இடங்களில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.மஞ்சளை இலை அல்லது காகிதத்தில் மடித்து கோயிலில் கொடுக்க வேண்டும். பன்னீர் கொண்டு வரவேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.