சபரிமலையில் விடுதி முன்பதிவு செய்பவர்கள் இரவு 11:30 மணிக்குள் செல்ல வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2019 01:12
சபரிமலை: சபரிமலையில் ஆன்லைனில் தங்கும் அறைகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் இரவு 11:30 மணிக்குள் செல்ல வேண்டும், அல்லாத பட்சத்தில் அறை முன்பதிவு ரத்து செய்யப்படும், என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு தேவசம்போர்டு அறைகளை வாடகைக்கு விடுகிறது. தினமும் மாலை 4:00 மணி முதல் மறு நாள் அதிகாலை 4:00 மணி வரை அறைகள் வழங்கப்படும். அதன் பின்னர் தேவைப்படுபவர்களுக்கு மேலும் நான்கு மணி நேரம் வழங்கப்படும். இதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். 250 முதல் 1,600 ரூபாய் வரையில் வாடகை கட்டணம் உள்ளது. அதிக பட்சமாக 50 பேர் வரை தங்கும் அறைகளும் உள்ளது.இந்த அறைகளில் மூன்றில் ஒரு பங்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகிறது. கூட்டம் அதிமாகும் போது இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர முடியாத நிலை ஏற்படும். தாமதமாக வரும் போது அறைகள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் விடுதி அலுவல ஊழியர்களுக்கும், பக்தர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க முன்பதிவு செய்த பக்தர்கள் இரவு 11:30 மணிக்குள் தங்கும் விடுதி அலுவலகத்தில் தங்கள் முன்பதிவு கூப்பனை கொடுத்து உறுதி செய்ய வேண்டும். அல்லாத பட்சத்தில் அறை முன்பதிவு ரத்து செய்யப்படுவதோடு, பணமும் திருப்பி தரப்படாது, என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.