சபரிமலை: புல்மேடு பாதை வழியாக சென்றால், செங்குத்தான மலை ஏறாமல் சபரிமலைக்கு செல்ல முடியும்.சபரிமலை செல்ல பெருவழிப்பாதை என்று அழைக்கப்படும் அழுதை - கரிமலை பாதை, பம்பை -நீலிமலை - அப்பாச்சிமேடு, குமுளி - புல்மேடு - பாண்டித்தாவளம் என மூன்று முக்கிய பாதைகள் உள்ளன. முதல் இரண்டு பாதைகளும் பாரம்பரிய பாதைகளாகும். ஆனால் செங்குத்தான மலையில் ஏறி வரவேண்டும்.மூன்றாம் பாதையான புல்மேடு பகுதி சன்னிதானத்தில் இருந்து உயரத்தில் உள்ளது. எனவே அந்த பாதையில் வரும் பக்தர்கள் செங்குத்தான இறக்கம் வழியாக இறங்கி வர வேண்டும். குமுளியில் இருந்து சத்திரம் வரை பக்தர்கள் தங்கள் வாகனத்தில் வரலாம். அங்கிருந்து பாதயாத்திரையாக புல்மேடு வழியாக பாண்டித்தாவளம் வனத்துறை செக்போஸ்ட் கடந்து நேரடியாக சன்னிதானம் அடையலாம். இந்த வழியாக வரும் பக்தர்களுக்கு சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சத்திரத்தில் பக்தர்களை இறக்கிவிட்ட வாகனங்கள் நிலக்கல் வந்துவிட வேண்டும்.தரிசனம் முடிந்தபின், மலையில் இருந்து கீழிறங்கி பம்பை வந்து நிலக்கல்லில் தங்கள் வாகனங்களை அடைந்து ஊர் திரும்பலாம்.