ராவண வதம் முடிந்ததும், அனுமன் குதித்துக் கொண்டே சீதையை பார்க்க வந்தார். அவர் முகம் ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்தது போல பிரகாசம் அடைந்தது. அந்த மகிழ்ச்சியுடன், சீதாதேவியை இம்சை செய்த அரக்கிகளை ஒருகை பார்க்க எண்ணினார். ஆனால் சீதாதேவி, ""ஒரு ராஜா உத்தரவிட்டால், அதை செய்வது பணியாளர்களின் கடமை. ராவணனின் உத்தரவால் அவர்கள் என்னை இம்சை செய்தார்கள்.
மற்றபடி, என் மீது அவர்களுக்கு பகை உணர்வு வர வழியில்லை! இப்போது ராவணன் தம்பியான விபீஷணன் ராஜாவாகி, "என்னை வணங்க உத்தரவிட்டால், அதையும் ஏற்பார்கள் அல்லவா? நல்லவர்களின் லட்சணமே கருணை தான். உலகத்தில் தப்பு செய்யாதவர்கள் யார்? அவர்களை தண்டிக்காதே!” என புத்திமதி கூறினாள். அதைக் கேட்ட அனுமனும் அமைதி அடைந்தார்.