Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)ஜம்முன்னு இருக்கலாம் டும் டும் கொட்டலாம் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சனீஸ்வரர் அருளால் சாதனை படைப்பீர்கள் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சிந்தித்து செயல்பட்டால் சிகரத்தை தொடலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2019
12:22

பிறரை மதிப்புடன் நடத்தும் கன்னி ராசி அன்பர்களே!

உங்கள் நட்பு கிரகமான சுக்கிரன் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு  மலர்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் வீண் அலைச்சல் இருக்கும். கணவன்,  மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. குடும்பத்தில்   பிரச்னைகள் தலை தூக்கலாம்.  மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும்.  குருபகவானால்  மன உளைச்சல், உறவினர் வகையில் வீண் பகை ஏற்படலாம்.  ஆனால், நீங்கள் சிந்தித்து செயல்பட்டால் வாழ்வில் சிகரத்தைக் கூட எட்டிப்  பிடிக்க முடியும். மார்ச் 27 முதல்  ஜூலை 7 வரை  சாதகமான நிலை  உருவாகும். செயலில் வெற்றி ஏற்படும். மனதில் நிம்மதி நிலைக்கும். புதிய வீடு  வாங்கலாம். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடி  போகலாம். புதிதாக வண்டி வாகனம் வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர்  மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். தம்பதியிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உறவினர் உங்கள் உறவை நாடி வருவர்.  சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். குருபகவான் குடும்பத்தில் குதூகலத்தை  கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். பொருளாதார வளம்  அதிகரிக்கும்.  பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு  குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பெண்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் வீண் செலவு ஏற்படலாம். சிக்கனமாக  இருப்பது புத்திசாலித்தனம். மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை குதூகலமான  பலனைக் காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும், உங்களால் குடும்பம்  முன்னேற்றப்பாதையில் செல்லும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான  வளர்ச்சி காண்பர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை சேர்க்கும். உறவினர்கள்  உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஆக.31க்கு  பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை  அமோக லாபம் காண்பர்.  குருபலத்தால் தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள்  வளர்ச்சிப்பாதையில் வெற்றி நடை போடுவர்.
* வியாபாரிகள் ஆக.31க்கு பிறகு தீயோர் சேர்க்கையில் இருந்து விடுபட்டு  வீண்விரயத்தில் இருந்து தப்பிப்பர்.  
* ஆசிரியர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை சிறப்பான முன்னேற்றம்  இருக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆக.31க்கு பிறகு பின்தங்கிய நிலை
மறையும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மார்ச் 27க்கு பிறகு சாதகமான  காற்று வீசும்.
* ஐ.டி., துறையினர் விடா முயற்சியால் நினைத்ததை செய்து முடிப்பர்.
* அரசியல்வாதிகள் ஆக.31க்கு பிறகு வாழ்வில் மேம்பாடு அடைவர். விரும்பிய  பதவியும், ஆதாயமும் கிடைக்கும்.
* கலைஞர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை வசதியுடன் வாழ்வர் புதிய  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகளுக்கு மார்ச்  27 முதல் ஜூலை 7 வரை சாதகமான காலகட்டம்.  
* மாணவர்கள் குருவின் பார்வையால் வளர்ச்சி காண்பர். மார்ச் 27 முதல்  ஜூலை 7 வரை அனுகூல பலன் கிடைக்கும்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். புதிய தொழில்  தற்போது தொடங்க வேண்டாம்.
* வியாபாரிகளுக்கு ஆக. 31க்கு பிறகு எதிரிகளின் இடையூறு  தலைதூக்கும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில்  வேலைப் பளுவுக்கு ஆளாவர்.
* மருத்துவர்கள் சனிபகவானால் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலைக்கு ஆளாவர்.  பெற்றோரை  பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்.
* வக்கீல்கள் வழக்கு, விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கப் பெற்றாலும்,  அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய வழக்குகள் கிடைக்கும்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும்  கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை  விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்.
* பொதுநல சேவகர்களுக்கு எதிலும் விடா முயற்சி தேவைப்படும்.
* விவசாயிகளுக்கு, கால்நடை பராமரிப்புச் செலவு கூடும்.

பரிகாரம்:
●  வியாழனன்று குரு பகவானுக்கு அர்ச்சனை
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
●  சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.