ஓசூர்: ஓசூர் ராம்நகர் அருள்மிகு கோட்டை மாரியம்மன் மாவிளக்கு திருவிழா மற்றும் பல்லக்கு உற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஓசூர் ராம்நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாவிளக்கு திருவிழா மற்றும் பல்லக்கு உற்சவ விழா விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. நடபாண்டு நேற்று திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. கொடிகம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்து கோவில் முன் நடப்பபட்டது.கவுன்சிலர் சரஸ்வதி நடராஜன் தலைமை வகித்தார். நகராட்சி துணைத்தலைவர் ராமு, ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், மாளவிக்கு அபிஷேகம் ஆகியவை நடக்கிறது. வரும் 8ம் தேதி கோட்டை மாரியம்மன், பிளேக் மாரியம்மன், துக்கியம்மன், மணல் மாரியம்மன், கங்கம்மன் உள்ளிட்ட ஏழு மாரியம்மன் தேவைகளுக்கு மாவிளக்கு திருவிழா நடக்கிறது.அன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. மாவிளக்கு பூஜையில் பெண், ஆண் பக்தர்கள் ஏராளமா÷õனர் கலந்து கொள்கின்றனர். மறுநாள் 9ம் தேதி இரவு கோட்டை மாரியம்மனுக்கு பல்லக்கு உற்சவ விழா நடக்கிறது. மாரியம்மன் பல்லக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களால் நகர் வலம் எடுத்து வரப்படுகிறது. இரவு பூமிதி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோட்டை மாரியம்மன் ஆலயக்கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.