விருதுநகர் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2020 01:01
விருதுநகர்: மாவட்டத்தில் உள்ள கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. விருதுநகர் ஸ்ரீராமர் கோயில் அமைந்துள்ள ஸ்ரீபத்மாவதி சமேத ஸ்ரீனிவாசபெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 18வது ஆண்டாக சிறப்பாக நடந்தது. சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிே ஷகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதன் பின்னர் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. ஸ்ரீராமர், ஸ்ரீபத்மாவதி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விருதுநகர் கம்மவடுகன் கல்வி கலாச்சார பொது அறக்கட்டளை செய்திருந்தனர்.
ராஜபாளையம்: ராஜபாளையம் சம்பந்தபுரம் சோலைமலை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசலை திறப்பை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடந்தது. சுவாமி சஷே வாகனத்தில அருள் பாலித்தார். அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
* திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய கோயிலில் ஸ்ரீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
* ராஜபாளையம் . வேட்டைபெருமாள் கோயிலில் காலை மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
* புதுப்பாளையம் கோதண்டராமசுவாமி கோயிலில் அதிகாலை முதல் காத்திருந்த பக்தர்களுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் அனுமன் சமேதலட்சுமணர் சீதாவுடன்கோதண்டராமர் காட்சியளித்தார். சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
* சம்பந்தபுரம் ஸ்ரீராமசுவாமி கோயிலில் காலை 5:30க்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. லட்சுமணர், சீதாவுடன் ராமர் காட்சியளித்தார். மூலவருக்குபுஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு விழா நேற்று காலை 7:00 மணிக்கு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் வீற்றிருந்த பெருமாள் சுவாமி சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். குழுமி இருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபால என கோஷமிட்டு வணங்கினர். இதன் பின்னர் யானை மண்டபத்தில் வீற்றிருந்த பெருமாளுக்கு பக்தர்கள் பல்வேறு பொருட்களை காணிக்கை செலுத்தினர். மாலையில் நான்கு ரதவீதியில் வலம் வந்த சுவாமி கோயிலை சென்றடைந்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருவிழா மண்டகப்படியார்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.