பதிவு செய்த நாள்
08
ஜன
2020
10:01
பொள்ளாச்சி: திருவாய்மொழித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பகல்பத்து உற்சவம் நிறைவடைந்து, ராப்பத்து உற்சவத்தின் முதல்நாளான நேற்று வைகுண்ட வாசலை கடந்து பெருமாள் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.ரிக், யசூர், சாம, அதர்வன வேதங்களை உள்ளடக்கியது நாலாயிரத்திவ்யபிரபந்தம்.
இதை திருவாய்மொழி என்றழைக்கப்படுகிறது.வைகுண்ட ஏகாதசியான நேற்று, பொள்ளாச்சி கடைவீதியிலுள்ள, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவிலில், ராப்பத்து உற்சவம் துவங்கியது. பாகவதர்கள், வேதவிற்பன்னர்கள், திருவாய்மொழியை பாராயணம் செய்ய, பெருமாளுக்கு, அதிகாலை, 2:00 மணிக்கு, மகா அபிஷேகம் செய்தனர். 3:30 மணிக்கு மந்திரபுஷ்பம், வேதபாராயணம், பெருமாளுக்கு திருவாராதனம், திருப்பாவை சேவித்து, சாத்துமுறை நிறைவடைந்து, 4:30 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக பெருமாள் சொர்க்கவாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று மூலவர் முத்தங்கி அலங்காரத்திலும், உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்திலும்காட்சியளித்தனர். திருவாய்மொழித் திருவிழா, ஜன., 15ம் தேதி, நம்மாழ்வார் மோட்சமடையும் நிகழ்ச்சியோடு நிறைவடைகிறது.