கெங்கவல்லி: கெங்கவல்லி, முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவ விழா நடந்தது. கெங்கவல்லியில், திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சன்னிதானம், திருவண்ணாமலை, துறையூர், திருமுதுகுன்றம் ஆதீனத்திற்கு உட்பட்ட முருகன் கோவில் உள்ளது. நேற்று, வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமானுக்கு, திருக்கல்யாண வைபவ விழா நடந்தது. வீரசைவ சிம்மாசனாதிபதி, 24வது பட்டத்து குருமகா சன்னிதான வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில், சாந்தலிங்க மருதாசலம் அடிகளார் மற்றும் குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.