மஞ்சூர்:கீழ்குந்தா கிராமத்தில் ஹெத்தையம்மன் கோவில் புனரமைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.மஞ்சூர் அருகே, உள்ள கீழ்குந்தாவில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் கோவில் உள்ளது. குந்தை சீமைக்கு உட்பட்ட, 14 கிராமங்களுக்கு சொந்தமான இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கீழ்குந்தா கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, 14 கிராம தலைவர் போஜன் தலைமை வகித்தார். இதில், மூன்று மாத காலத்திற்குள் கோவில் திருப்பணிகளை முடித்து, வரும், மே மாதம் முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது; அதை தொடர்ந்து நடக்க உள்ள தெவ்வப்பா பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது, என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், குந்தை சீமை உட்பட்ட கிராம தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.