பரமக்குடி: ஏகாதசி விழா நிறைவடைந்ததை அடுத்து நேற்று தனுர்மாத துவாதசிவிழா அனைத்து பெருமாள் கோயில்களிலும் கொண்டாடப்பட்டது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் சொர்க்கவாசல் வழியாகவந்தார். நேற்று முன்தினம் இரவுமுதல்இராப்பத்துவிழா துவங்கி நடக்கிறது. நேற்று தனுர் துவாதசி விழாவையொட்டி, சுந்தரராஜப்பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வந்தார். ஏகாதசி விரதம் மேற்கொண்டவர்கள்நேற்று காலை உணவு சமைத்து சுவாமிக்கு படைத்து விரதம் முடித்தார்கள். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி அனுமார்கோதண்டராமசாமி கோயிலிலும் துவாதசி விழா நடந்தது.
*பரமக்கு சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த காக்காதோப்புபதினெட்டாம் படி கருப்பண சுவாமிக்கு தனுர் துவாதசி கமிட்டியார்சார்பில் 39 வது ஆண்டு அபிஷேக விழா நடந்தது. மாலை 5:00 மணிக்குபக்தர்களின்பூத்தட்டு ஊர்வலம்நடந்தது. மாலை 6:30 மணிமுதல்கருப்பணசாமிக்கு 13 வகையான அபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது.