பதிவு செய்த நாள்
11
ஜன
2020
12:01
கடலுார்:கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.
விழாவை முன்னிட்டு, நேற்று காலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேக ஆராதனை நடந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் சிவகாசுந்தரி சமேத நடராஜருக்கு காலை 5:30 மணிக்கு அரிசி மாவு, சந்தனம், பன்னீர், பால், தேன் உள்ளிட்ட 64 வாசன பொருட்களை கொண்டு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பின் கோபுர வாசல் அடைக்கப்பட்டு, நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனம் நடந்தது.பின்னர் நடராஜருக்கு தீர்த்த வாரியும், சிவகாமசுந்தரி, நடராஜருக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.