திருப்புல்லாணி: ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 27வது பாசுரமான கூடாரவல்லி உற்ஸவம் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் நடந்தது.
கோயில் பட்டாச்சாரியார் ஒருவர் கூறுகையில், மார்கழி மாதம் 27ம் தேதி,திருப்பாவையில் 27வது பாசுரத்தில், “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்று மதுரை கள்ளழரை நோக்கி ஆண்டாள் பாடியுள்ளார். திருச்சி ரங்கநாதரை தமக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி பிரார்த்தனை செய்தார். கள்ளழகரும் மனம் உவந்து ஆண்டாளுக்கு ஆசீர்வாதம் செய்தார்.அதனடிப்படையில் ஆண்டாளுக்கும்,ரெங்கநாதருக்கும் திருமணம் செய்விக்கப்படுகிறது. கி.பி.1017ம் ஆண்டு அவதரித்த வைணவ மகான் ராமானுஜர், முன்பு ஆண்டாள் வேண்டிய 100 அண்டாவில் அக்கார அடிசல், வெண்ணை வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். இதுவே இவ்விழாவின் சிறப்பம்சமாகும். ஆண்டாளுக்கு விஷேச திருமஞ்சனம் நடந்தது.