பதிவு செய்த நாள்
13
ஜன
2020
10:01
காங்கேயம்: உள்ளாட்சியில் பெண்கள் ஆதிக்கம் பெறுவர் என்பதை, சிவன்மலை ஆண்டவர், ௭௦ நாட்களுக்கு முன்பே கணித்து விட்டதாக, பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் முருக பெருமான் தோன்றி, உத்தரவிடும் பொருள் பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும். இந்த பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டியே கணிப்பதாக அமையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. துப்பாக்கி தோட்டா வைத்தபோது, கார்கில் போர் நிகழ்ந்தது. தண்ணீர் வைத்தபோது சுனாமி ஏற்பட்டது. கடந்த, ௨019 அக்.,30 முதல் உத்தரவு பெட்டியில், ஐம்பொன் மகாலட்சுமி சிலை வைக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் குறித்து, பக்தர்கள் யூகித்து வந்தனர். இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தலில், பெண்கள் அதிக அளவில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். ‘மகாலட்சுமி, பெண்களின் அம்சம்; எனவே உள்ளாட்சியில் பெண்கள் ஆதிக்கம் பெறுவதை, சிவன்மலை ஆண்டவர் முன்பே கணித்துள்ளார்’ என்றும் பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.