நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் முத்தலாம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.பண்டசோழநல்லுார் கிராமத்தில் அமைந்துள்ள முத்தலாம்மன் கோவிலில் நேற்று போகிப்பண்டிகையையொட்டி தீமிதி உற்சவம் நேற்று விடியற்காலை 5:00 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். வரும் 16ம் தேதி மாலை இங்கு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடக்கிறது.