பதிவு செய்த நாள்
15
ஜன
2020
01:01
மேல்மருவத்துார் : பஞ்ச பூதங்களான, இயற்கையை வணங்கி, பாதுகாக்க வேண்டும் என, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளார், பக்தர்களுக்கு, பொங்கல் அருளாசி உரையில் கூறியுள்ளார்.
பங்காரு அடிகளாரின் அருளாசி:பொங்கல் என்பது இயற்கை விழா; பஞ்ச தெய்வங்களை வணங்கும் விழா. நாம் இயற்கையை வணங்கும்போது, அது தன் கடமையை செவ்வனே செய்கிறது.தை பிறந்தால் வழி பிறக்கும்; தை மாதம் பொங்கல் திருநாளில், பூமிக்கு பூஜை போட்டு, புதிய மண்பானையில் பாலுாற்றி வணங்குகிறோம்.பால் சிறிதே ஊற்றினாலும், அது பானை முழுவதும் பொங்கி, தை... தை... என, கொதிக்கும். அவ்வாறு கொதிக்கும்போது, நம் மனம் முழுவதும் சந்தோஷம் குதிக்கும்.அந்த காலத்தில், சித்தர்கள் உருவாக்கிய பஞ்சாங்கத்தால், வானிலையை துல்லியமாக கணிக்க முடிந்தது. தற்போது, விஞ்ஞானம் வளர்ந்தும், அவ்வாறு கணிக்க முடிவதில்லை.
ஜனத்தொகை பெருக பெருக, அனைத்தும் கெட்டுவிட்டது. இச்சூழல் மாற, அனைவரும் மவுனத்தை கடைபிடிக்க வேண்டும்.பஞ்ச பூதங்களான இயற்கையை வணங்கி, பாதுகாக்க வேண்டும் எனக்கூறி, இந்த பொங்கல் திருநாளில், அனைவரையும் வாழ்த்துகிறேன். வாசர்களுக்கும், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர், அருளாசி வழங்கியுள்ளார்.