சாத்துார்: சாத்துார் மணல்மேடு திரு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.தைப்பொங்கலுக்கு மறுநாள் சாத்துார் வைப்பாற்றில் மணல்மேடு திருவிழா நடைபெறும்.
நேற்றும் வழக்கம் போல் மதியம் 2:00 மணிக்கு மணல்மேடு திருவிழா துவங்கியது. சாத்துார் மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் வைப்பாற்றில் ஒன்று கூடினர் . வீட்டில் சமைத்து கொண்டு வந்த உணவை ஆற்றில் வைத்து உறவினர்கள், மற்றும் நண்பர்களுடன் உண்டனர். சாதி, மத, வித்தியாசமின்றி கலந்து கொண்டு நண்பர்கள். உறவினர்களுடன் கோ.கோ., கபடி, வாலிபால், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் விளையாடினர். வைப்பாற்றில் தற்காலிகமாக ஐஸ்கிரிம், வடைக் கடை ,டீ க்டை மற்றும் சிற்றுண்டி கடைகள் போடப்பட்டிருந்தன. சாத்துார் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சாத்துார் டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6:30 மணிக்கு மணல் மேட்டுத் திருவிழா நிறைவடைந்தது.