திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உள்ள தாய்விளை இல்லங்குடி சாஸ்தா கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக யாகசாலை பணிகள் காலையில் துவங்கி மகாபூர்ணாகுதி தீபாராதனை, வேதபாராயணம், பிரசாதம் வழங்குதல், ஸ்பர்சாகுதி, ஜூவகும்பங்கள் எழுந்தருளின. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட கும்பங்களில் உள்ள புனித நீர் விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பூர்ண புஷ்கலாம்பாள் சமேத இல்லங்குடி ஹரிஹர புத்ர தர்ம சாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. சாஸ்தா கோயிலில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் திறந்து வைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஹரிகரமுத்து மற்றும் பலர் செய்திருந்தனர்.