பதிவு செய்த நாள்
20
ஜன
2020
03:01
தல விருட்சங்களை வழிபட்டாலும் சில கோயில்களில் மரங்கள் தெய்வங்களுக்கு நிகராகக் கருதப்படுகின்றன.
* நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உறங்காப்புளி என்னும் புளியமரத்தின் வடிவில் லட்சுமணர் இருக்கிறார். நம்மாழ்வார் இதன் அடியில் இருந்தபடியே திருமாலை வழிபட்டு பாசுரங்கள் பாடினார்.
* பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டை ஆவுடையார்கோவிலில் உள்ள ஆலமரம், சிவனாக வழிபடப்படுகிறது. இம்மரத்தின் ஒரு பகுதியை லிங்கம் போல அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர்.
* திருவொற்றியூரில் தேவாரம் பாடிய சுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் மகிழமரத்தடியில் திருமணம் நடந்தது. சிவனே தலைமையேற்று நடத்தி வைத்தார். இதன் நினைவாக மரத்தடியில் சிவன் பாதம் உள்ளது. இந்த மரத்தை சிவனாகக் கருதி வழிபடுகின்றனர்.
* குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் உள்ள ஆதி பலாமரத்தை ‘குறும்பலாநாதர்’ (சிவன்) என்ற பெயரில் வழிபடுகின்றனர்.
* திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள அரச மரத்தின் கீழ் சுவாமி தேவர்களுக்காக தாண்டவம் ஆடினார். இதனால் இம்மரம் சிவபெருமானாக கருதப்படுகிறது.