பதிவு செய்த நாள்
21
ஜன
2020
11:01
திண்டிவனம் : திண்டிவனம் அருகே தாதாபுரம் கிராமத்தில் மாணிக்க ஈஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.
திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த மாணிக்க ஈஸ்வரர் கோவில் உள்ளது. பொங்கல் விழாவையொட்டி, கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, ராஜமாணிக்கம், வரதன், தட்சிணாமூர்த்தி, பழனி, சீனு, சங்கர் ,சத்யா, குமார் ஆகியோர் செய்திருந்தனர்.தொடர்ந்து, நேற்று கல்லேரி அம்மன் கிராம தேவதை கோவில் திருவிழா நடந்தது. பின்னர் அம்மன் வீதியுலா நடந்தது. இதில், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க..,செயலர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்