விழுப்புரம் அருகே ப.வில்லியனுாரில் உள்ள கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வரும் 25ம் தேதி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. ப.வில்லியனுாரில் உள்ள கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வரும் 25ம் தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி, மதியம் 2:00 மணிக்கு மூலவர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாளுக்கும், உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.இதையடுத்து, மூலவர் பெருமாளுக்கு புஷ்பம், துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், கனகவல்லி தாயாரோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து, மாலை 5:30 மணிக்கு, கருட கம்பத்தில் மகா சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. ஏற்பாடுகளை, ப.வில்லியனுார் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.