காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், 63 நாயன்மார்களின் ஒருவரான நீலகண்டர் குரு பூஜை நேற்று நடைபெற்றது. இதில் அவரது உற்சவர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதியில், திருநீல கண்டர் மண்டபம் உள்ளது. அங்கு, 63 நாயன்மார்களின் ஒருவரான நீலகண்டருக்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி விழா அன்று. குரு பூஜை நடத்துவது வழக்கம்.நேற்று காலை, இந்த விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, நீலகண்டர் உற்சவர் சிலை ராஜவீதி மற்றும் காமராஜர் சாலையில் வீதியுலா நடைபெற்றது. பின், மண்டபத்தை சென்றடைந்தது. திரு நீலகண்டர் குறித்த சொற்பொழிவு நடைபெற்றது.