பதிவு செய்த நாள்
23
ஜன
2020
10:01
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நாளை, 24ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கொடியேற்றத்துக்காக, சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து மூங்கில் மரம் கொண்டு வரப்படுகிறது. நேற்று, முறைதாரர்கள், மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்றம், பக்தர்கள், சர்க்கார்பதி வனப்பகுதிக்கு சென்று, 91 அடி மூங்கில் மரம் வெட்டினர்.சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில், கொடிக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட கம்பம், ஊர்வலமாக மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆழியாறு ஆற்றுப்படுகையில், நாளை கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பிப்., 6ம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், பிப்., 9ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 11ம் தேதி காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது.