பதிவு செய்த நாள்
23
ஜன
2020
10:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், பாதுகாப்பு கருதி, கிழக்கு ராஜகோபுரம் வழியில் மட்டும், பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், கடந்த வாரம், மர்ம நபர்கள் இருவர், உள்ளே நுழைந்து, கோவில் வளாகத்தை புகைப்படம் எடுத்தனர். இது குறித்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, கோவிலுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாதுகாப்புக்கு முன், மூன்று ராஜகோபுரம் வழியாக, பக்தர்கள் சென்றனர். தற்போது, கிழக்கு ராஜகோபுரம் வழியில் சென்று, அம்மனை தரிசித்து, அதே வழியில் திரும்புகின்றனர். அனைத்து வழிகளிலும், போலீசார் பாதுகாப்பில் உள்ளனர். அதே போல், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் கோவில்களிலும், போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது.